பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

ஜெயித்து வாழ்ந்திட வாலிபர் செய்திகள்

கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!


14.11.2024

உங்களை அண்டி வரும் ‘இரட்சிப்பின் செய்தியை’ தள்ளிவிட வேண்டாம்!

  ரு சமயம், எங்கள் ஊருக்கு மேல் திசையில் உள்ள கிராமம் ஒன்றுக்கு ஒரு வாலிப மகள் மத்தியான வெயிலில் நடந்துபோய் கொண்டிருந்தபோது சற்றும் எதிர்பாராத விதமாக சற்று தொலைவில் ஒரு நாகப்பாம்பு, ஒரு எலியை துரத்திக்கொண்டு வருவதை அந்தப் பெண் கவனித்தாள். தனது எதிராளியின் வாய்க்கு தப்பும்விதமாக, அந்த எலியானது நேராக, அந்தப் பெண்ணின் கால்களுக்கு நேராக ஓடி வந்து, வேறு திசை வழியாக ஓடிவிட்டது. ஆனால், எலியை துரத்திவந்த பாம்பு, பெண்ணின் கால்களுக்கே விரைந்து வந்து அவளுடைய காலை ஓரிரு தடவைகள் சினங்கொண்டு கொத்திவிட்டுச் சென்றுவிட்டது. பாம்பின் கடியோடு ஊர் வந்து சேர்ந்த பெண்ணுக்கு எவ்வளவோ உடனடி சிகிச்சை செய்து பார்த்தும் பலனில்லாமல் அன்றைய தினமே அவள் மாண்டு போய்விட்டாள்.

 மேற்கண்ட துயர சம்பவத்தை சொல்லி, மரணம் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், எந்தவிதமாகவும் சடுதியாக வரலாம் என்று சுவிசேஷகர் சாமுவேல் ஐயா அவர்களின் செய்தியை கேட்டுக்கொண்டிருந்த ஒரு அம்மாள், நன்றாய் தூங்கி விட்டார்கள்! அவர்களுக்கு பக்கத்தில் இருந்த ஒரு சகோதரி “இது என்ன? இவ்வளவு எச்சரிப்பபோடு கடந்துவரும் தேவ செய்தியின் நேரத்தில், இந்த அம்மாள் நிர்விசாரமாக தூங்கிக் கொண்டிருக்கிறார்களே” என்று தனது உள்ளத்திற்குள்ளாக வருத்தமுடன் எண்ணிவிட்டு வீட்டிற்குச் சென்றார்களாம்.

  பல ஆண்டு இடைவெளிக்கு பின்னர், தேவ செய்தி கொடுப்பதற்கு, அதே ஊருக்கு சாமுவேல் சுவிசேஷகர் சென்றிருந்த சமயம், அன்று பிரசங்க சமயத்தில் பாம்பு கடித்து உயிர் நீத்த வாலிப பெண்ணின் சரித்திரத்தை ‘கோடிட்டு’ சொல்லிக் கொண்டிருந்த சமயம், “நன்றாக கண்ணயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த அம்மாவையும்” ஒரு நல்ல பாம்பு கடித்து கொன்று போட்டது என்று கேள்விப்பட்டு அதிர்ச்சியுற்றார்!

  தேவ செய்திகளை ஏனோதானோவென்று கேட்டு, அதின் செய்திகளை கவலையின்றி வீசி எறிந்துவிட்டுச் செல்வது, மகா ஆபத்தான செயலாகும்!

  ஓ, வாலிபனே, “இதோ இப்பொழுதே அநுக்கிரக காலம், இப்பொழுதே இரட்சண்ய நாள்” (2கொரி.6:2) என்ற தேவனுடைய வார்த்தைக்கு செவிகொடுப்பதே நலம்!

- வாலிபம் இயேசுவுக்கே

'ஜெயித்து வாழ்ந்திட' வாலிபர் செய்திகள்!

கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!

அக்டோபர்

  • தெய்வ ஞானத்தின் அதிசயம் கண்டு, சிருஷ்டிகரிடம் திரும்புங்கள்!