கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!
21.01.2025
வாலிபனே, புதிய ஆண்டு “வாழ்க்கைப் பயணம்” கவனம்!
ஸ்காட்லாந்து தேவ மக்கள் 121-ம் சங்கீதத்தை தங்களின் “பயண சங்கீதமாய்” வைத்துள்ளார்கள்! தங்கள் வீட்டிலுள்ளவர்கள் பயணமாய் வெளியூர் செல்லும்போதோ அல்லது வீட்டிற்கு வந்த விருந்தாளி பயணமாய் திரும்பும்போதோ, இந்த 121-ம் சங்கீதத்தை குடும்பமாய் கூடி, வாசித்து, பல சமயங்களில் பாடி அனுப்பி வைப்பார்கள்! மன நெகிழ்ச்சியான வழி அனுப்பு ஜெபத்தில் கண்ணீருடன் “கர்த்தர் உன் போக்கையும், உன் வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்குங் காப்பார்” என கூறி அனுப்பி வைப்பார்கள்!
என் தகப்பனார், இளம் வாலிபனாய் இருந்த சமயம், உலகப்போர் மூண்டது! ஸ்காட்லாந்திலிருந்து அமெரிக்க தேசம் போக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது! அங்கு சில ஆண்டுகள் ஆரம்பத்தில் இருந்து விட்டு, பத்திரமாய் திரும்பினார்! பின்பு மீண்டும் போரின் உச்சநிலை அறிவிக்கப்பட்டு, மறுபடியுமாய் சில ஆண்டுகள் போர்முனைக்குச் சென்றார். இந்த முறையும், குடும்பமாய் கைகோர்த்து நின்று, வீட்டார் அனைவரும் கண்ணீர் சிந்தி:
“எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராய்
என் கண்களை ஏறெடுப்பேன்! வானத்தையும் பூமியையும்
உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்!
உன் காலைத் தள்ளாட வொட்டார், உன்னைக் காக்கிறவர் உறங்கார்!
இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை, தூங்குகிறதுமில்லை!
கர்த்தர் உன்னைக் காக்கிறவர், கர்த்தர் உன் வலது பக்கத்திலே
உனக்கு நிழலாயிருக்கிறார்! பகலிலே வெயிலாகிலும் இரவிலே
நிலவாகிலும் உன்னைச் சேதப்படுத்துவதில்லை!
கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்!
கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும்
இதுமுதற்கொண்டு என்றைக்குங் காப்பார்!
என, வழியனுப்பினர்! சில வருடங்களில், குண்டு காயங்கள்பட்டு, வீட்டிற்கு அனுப்பப்பட்டார்! மருத்துவமனையில் இருந்த காலங்களிலும் 121-ம் சங்கீதம் அவருக்கு புதுபெலன் தந்தது! தன் 87-ம் ஆண்டு மரித்த காலம் வரை, இந்த சங்கீதமே அவரை பெலன் செய்து..... மரணப் பள்ளத்தாக்கை கடந்து, கர்த்தரிடம் சமாதானமாய் போவதற்கு அவருக்கு உதவியது! ஓ வாலிபனே, இந்த ஆண்டாவது உன் வாழ்க்கை பயணத்தை, கர்த்தரிடம் ஒப்படைத்து பயணிக்க, மனந்திரும்புவாயாக!
- வாலிபம் இயேசுவுக்கே