பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

ஜெயித்து வாழ்ந்திட வாலிபர் செய்திகள்

கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!

image
08.03.2018

கிறிஸ்து நாமத்திற்கு அபகீர்த்தியா? வாலிபனே, மனந்திரும்பு!

சமீபத்தில் கோவையில் மிகவும் பிரபல்யமான ஐந்து ஜேப்படித் திருடர்களைப் போலீசார் கைதுபண்ணி அவர்களின் புகைப்படங்களையும் பத்திரிக்கையில் வெளியிட்டிருந்தனர். பத்திரிக்கையில் ஐந்துபேரின் படத்தையும் மேலெழுந்த வாரியாக நான் பார்த்தபோது, அவர்களில் ஒருவரின் பெயர் ‘தேவனுடைய நண்பன்’ என பெயர் பெற்ற விசுவாச தந்தை ஆபிரகாம்! மற்றொரு பெயர், போத்திபாரின் அரண்மனையில் தனக்கு நேரிட்ட பாலிய சோதனையை ஜெயித்து, அவரது உத்தம ஜீவியத்தினிமித்தம் சிறையிலிருந்து, எகிப்தின் அதிபதியாக உயர்ந்த யோசேப்பு!

இந்த கிறிஸ்தவ பெயர்களை குற்றப்பட்டியலில் காணும் ஒரு புற மதஸ்தன், இயேசு இரட்சகருக்குத் தன் இருதயத்தை மனமுவந்து திறந்து அவரைத் தன் அன்பின் நேசராக ஏற்றுக்கொள்ள முன்வருவானோ? கர்த்தருடைய ஜெபத்தின் முதல்வரியே “உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக” என்பதேயாகும். ‘நாமம்’ என்பது பெயரும், அந்த பெயருக்கேற்ற அர்த்தமும் கொண்ட ஓர் குணாதிசயமேயாகும்! “இயேசு” என்ற நாமம் ஓர் பெயர்! அந்தப் பெயரின் அர்த்தமும், குணாதிசயமும் “நம் பாவங்களை நீக்கி இரட்சிப்பார்” என்பதுமேயாகும்!

அவன் ஒரு கிறிஸ்தவன்! அவள் ஒரு கிறிஸ்தவள்! என நீங்கள் கிறிஸ்தவ பெயரிட்டு அழைக்கப்படும்போது, நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தை தாங்கியிருக்கிறோம் என்ற பொறுப்பை பெறுகிறீர்களல்லவா? ‘அவருடைய நாமம்’ தரித்த ஒரு கிறிஸ்தவன் துன்மார்க்க பாவம் செய்யும் போது, அவன் தூஷிக்கப்படுகிறான் என்பதை விட, அவன் பெயரில் அடையாளமாய் உள்ள “கிறிஸ்து” தூஷிக்கப்படுகிறாரே! ஓ கிறிஸ்தவ வாலிபனே, உன் இரட்சகருக்கு அபகீர்த்தி உண்டாக்கும் இக்காலத்தில், நீயும் உன் அன்புள்ள இரட்சக பெருமானுக்கு அபகீர்த்தி உண்டாக்கலாமா?..... உன் மீறுதலுக்கு தேவனுடைய இரக்கத்தை வேண்டி, துக்கித்து மனந்திரும்புவாயாக! கிறிஸ்துவின் வழியில், ஓர் புதிய சகாப்தம் உன் மூலம் தோன்றுவதாக! கிறிஸ்துவின் நாமத்திற்கு பரிசுத்த நறுமணம் உன் மூலம் பரிமளிப்பதாக! ஆமென்.

- வாலிபம் இயேசுவுக்கே

'ஜெயித்து வாழ்ந்திட' வாலிபர் செய்திகள்!

கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!

அக்டோபர்

  • தெய்வ ஞானத்தின் அதிசயம் கண்டு, சிருஷ்டிகரிடம் திரும்புங்கள்!