பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

ஜெயித்து வாழ்ந்திட வாலிபர் செய்திகள்

கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!

image
08.02.2023

பரலோக ஆசீர்வாதமே, லோக ஆதாயத்தை புறக்கணிக்கும்!

 இங்கிலாந்து தேசத்து பரிசுத்தவான் பில்லிபிரே, தன் வயது முதிர்ந்த விருத்தாப்பிய நாட்களில் தம்முடைய உருளைக்கிழங்கு வயலில் உருளைக் கிழங்குகளை மண் வெட்டியால் மண்ணைத் தோண்டி எடுத்துக் கொண்டிருந்தார். அந்த ஆண்டில் உருளைக்கிழங்கு விளைச்சல் மிகவும் மோசமாயிருந்தது.  பல செடிகளை வெட்டிப் பார்த்தும் அவைகளில் வேர்களேயன்றி கிழங்குகள் ஒன்றும் காணப்படவில்லை.

 பில்லி மிகவும் துக்கத்துடன் தனக்கு முன்னாலுள்ள வறட்சியான உருளைக் கிழங்கு வயலைப் பார்த்துக்கொண்டிருந்தார். அந்தச் சமயம் ஈனப்பிசாசு அவரண்டை வந்தான். “பில்லி, உன் பரலோகத் தந்தை உன்னை உளமார நேசிக்கின்றார் என்று நீ நினைக்கின்றாயா?” என்றான் அவன். “அதில் சந்தேகம் என்ன இருக்கின்றது? அவர் என்னை நேசிப்பதை நான் மனதார அனுபவித்து வருகின்றேனே!” என்றார் பில்லி. 

 “அவர் உன்னை நேசிப்பவரானால் உருளைக்கிழங்கில் நல்ல விளைச்சலை உனக்குக் கொடுத்திருப்பார் அன்றோ?”  என்றான் தந்திர பிசாசு.

 பிசாசின் இந்த வார்த்தைகளைக் கேட்டதும் பில்லி பிரேயிடம் தெய்வ கோபம் பொங்கி வந்தது. அந்த பிசாசைப் பார்த்து: “பிசாசே, உன்னோடு எனக்கு சில ஆண்டுகாலம் மிகவும் நெருங்கிய பிணைப்பும், நட்பும் இருந்தது. அநேக அப்பாவி ஏழை மனிதர்களைப் போல நானும் உன்னை நேசித்து உனக்குத் தொண்டு செய்தேன். ஆனால் நீ எனக்குக் கைமாறாகத் தந்தது நிர்ப்பந்தமான பூவுலக வீடும், எப்பொழுதும் கலக்கமும் திகிலும் நிறைந்த உள்ளமும், வேதனையில் தள்ளாடும் கவலையும், நரக அக்கினியின் பயங்கர நினைவுகளும் மாத்திரமே!”

 ஆனால் பரலோகத்திலுள்ள என் அன்பின் இயேசு இரட்சகருக்கு கடந்த 32 ஆண்டுகள் நான் அவரது அடிமையாக இருக்கின்றேன். அவர் எனக்குச் சந்தோஷமும், சமாதானமும் பொங்கி வழியும் ஒரு பரிசுத்த இருதயத்தையும் தந்திருக்கின்றார். பழமையாய் போகாததும், கறைபடாததுமாகிய இரட்சிப்பின், வெண்வந்திரத்தை அவர் எனக்கு உடுத்தியிருக்கின்றார். பரலோகத்தின் ராஜ அந்தஸ்தும் வாக்களித்துள்ளார். ஓர் ஆசீர்வதிக்கப்பட்ட பாக்கிய நாளில் அவர் என்னைத் தம்முடைய மகிமையின் மாளிகைக்கு அழைத்துச் சென்று நான் அவரோடு கூட என்றுமுள்ள சதாகாலங்களிலும் அரசாளும் சிலாக்கியத்தையும் தந்தருள்வார்! ”அப்பாலே போ, சாத்தானே” என்றார் பில்லி. சாத்தான் தலை கவிழ்ந்து ஓடிப்போனான்!

- வாலிபம் இயேசுவுக்கே

'ஜெயித்து வாழ்ந்திட' வாலிபர் செய்திகள்!

கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!

அக்டோபர்

  • தெய்வ ஞானத்தின் அதிசயம் கண்டு, சிருஷ்டிகரிடம் திரும்புங்கள்!