பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

ஜெயித்து வாழ்ந்திட வாலிபர் செய்திகள்

கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!


18.06.2024

‘சபை பாடல்’ நேரத்தின் மூலம் ‘பாவியை இரட்சித்த’ ஆண்டவர்

 ரு நாள் ஜியார்ஜ் முல்லர் தனது பள்ளி தோழன் “பெட்டா” என்பவனைச் சந்தித்தார். தான் ஒரு வேதபாட வகுப்புக்கு ஒழுங்காகச் சென்று கொண்டிருப்பதாகவும், அது மனதிற்கு மிகவும் சமாதானம் அளிப்பதாகவும் பெட்டா என்ற அந்த நண்பன் ஜார்ஜ் முல்லரிடம் கூறி அவரையும் வேதபாட வகுப்புக்கு வரும்படி அன்புடன் அழைத்தான். அந்த வேதபாட வகுப்புகளானது பெட்டா என்ற அந்த வாலிபனின் வியாபார நண்பன் “வாக்னர்” என்பவரின் வீட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

 அந்தக் குறிப்பிட்ட நாளில் அதாவது ஒரு சனிக்கிழமை பெட்டா தனது பள்ளி நண்பன் ஜியார்ஜ் முல்லரை அழைத்துக்கொண்டு வாக்னர் என்ற தனது வியாபார நண்பனின் வீட்டில் நடைபெறும் வேதபாட வகுப்புக்குச் சென்றார். பெட்டாவுக்கும், முல்லருக்கும் அன்பு நிறைந்த வரவேற்பு வாக்னர் வீட்டில் கிடைத்தது.

 முதலாவதாக, அங்கு பக்தி பரவசம் நிறைந்த இனிமையான பாடல் ஒன்று குழுவாகப் பாடப்பட்டது. அதைத் தொடர்ந்து வேதபாடம் வாசிக்கப்பட்டு, வந்திருந்தோர் ஜெபிக்க ஆரம்பித்தார்கள். பாடல் நேரமும், ஜெப வேளையும் முடிந்த பிறகுதான், வேதபாட வகுப்பு துவங்கியது! கூடியிருந்த அனைவரும் அத்தனை பக்தியோடு பாடல்கள் பாடி மகிழ்ந்து ஜெபித்தார்கள்! பரவசமான பாடல் வரிகளும் அந்த கிருபை நிறைந்த ஜெபங்களும்தான் முல்லரின் பாவ இருதயத்தை அதிகமாகத் தொட்டது! அன்று தன்னை கிறிஸ்துவுக்கு ஒப்புவித்த முல்லர், மாபெரும் தேவமனிதனாய் வளர்ந்து, தனது ஊழியத்தின் மூலமாய், தேவனை மகிமைப்படுத்தினார்! கிறிஸ்தவ கூட்டங்களில், ‘பாடல் நேரத்தையும்’ ‘ஜெப நேரத்தையும்’ அற்பமாக எண்ணி, கூட்டத்திற்கு தாமதமாய் வருபவர்கள், ஒருவேளை தங்களின் பெரிய ஆசீர்வாதங்களை இழந்திடும் வாய்ப்புகூட இருக்கிறது!

 மிகுந்த பக்தியோடு ஏறெடுக்கும் பாடல்கள், ஜெபங்கள்கூட ‘பாவியாகிய ஒரு ஆத்துமாவை’ சந்தித்து மனம் மாறச் செய்திடும்! இவ்வித பாக்கியத்தை கருதி, ‘குறிப்பாக’ வாலிப பிள்ளைகளை சபை ஆரம்பத்திலேயே அழைத்து வந்து அமர வைப்பது பெற்றோரின் தலையாய கடமையாய் மாறக்கடவது!


- வாலிபம் இயேசுவுக்கே

'ஜெயித்து வாழ்ந்திட' வாலிபர் செய்திகள்!

கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!

அக்டோபர்

  • தெய்வ ஞானத்தின் அதிசயம் கண்டு, சிருஷ்டிகரிடம் திரும்புங்கள்!