பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

ஜெயித்து வாழ்ந்திட வாலிபர் செய்திகள்

கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!

image
15.02.2020

‘ஆத்தும விரோதி’ சாத்தான் பிடியிலிருந்து இரட்சிக்கப்படுங்கள்!

வாழ்க்கையில் வறுமைக்கோட்டில் வாழ்வோர், கடுங் கஷ்டத்தில் உழல்வோர்..... இரந்துண்ண மனமின்றித் தங்கள் மானத்தைக் காக்கும் பொருட்டுத் “தற்கொலை” புரிவதையும்கூட உலகில் நாம் காண்கின்றோம். ஆனால், வாழ்வில் ‘தாழ்ச்சி ஏதும் இல்லாத’ ஒரு கிறிஸ்தவ சகோதரி இம்முடிவை எடுக்க அவர்களுக்கு ஆலோசனை சொன்ன கொடிய நீசன் யார்? “உடம்பெல்லாம் மண்ணெண்ணெயை நன்றாக ஊற்றி நனைய வைத்துக்கொண்டு, நெருப்புக் குச்சியைக் கிழித்து வைத்து செத்து மடிந்து போ! இனி உனக்கு உலகம் வேண்டாம். கணவனை இழந்த உனக்கு இனி வாழ்க்கையில் சந்தோஷமேது?” என்ற மாபயங்கர ஆலோசனையை மிகவும் இங்கிதமாக அந்த சகோதரியின் உள்ளத்தில் போட்டு, அதில் வெற்றி பெற துடிக்கும் துஷ்டன் யார்? அவன், நம் ஆத்தும விரோதி சாத்தானே ஆவான். “தற்கொலை நாடிய என் அருமை மகளே, கொன்றுவிடும் அக்கினி பிரவேசத்துடன் உன் காரியம் முற்றுப் பெறப்போவதில்லை. பூவுலகின் அக்கினி உன்னை வேக வைத்தபின், நித்திய நரக அக்கினி யுகா யுகங்களாக உன்னைத் தொடரப் போகின்றது. அந்த அக்கினியின் உக்கிரத்தை உன்னால் சகிக்க இயலாது. என் அன்பு மகளே, நான் உன்னை நேசிக்கின்றேன். இக்கொடுஞ்செயலை எந்நிலையிலும் புரிந்து விடாதே!” என்ற ஆவியானவரின் அன்புக் குரலையும் அந்த மாது அன்று கேட்டுவிட்டாள். நல்ல வேளை, அவள் தப்பித்தாள்!

ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த அந்த பெண், உடனே விழிப்படைந்து, மண்ணெண்ணையை தூக்கி எறிந்துவிட்டு, தன் கைப்பிள்ளையை அணைத்துக் கொண்டு, “ஓ, தேவனே! அப்படியானால், என் இந்த பாவச் செயலை மன்னித்து, என்னையும் உம் மகளாய் மீண்டுமாய் ஏற்று, இன்றுமுதல் என்னை நடத்தும்!” என கண்ணீருடன் இரட்சகரிடம் தன்னை ஒப்புக்கொடுத்தாள்.

ஆம், பூமி எங்கும் உலாவி வரும் சாத்தான், நமது ஆத்தும விரோதி! ஏழை, நடுத்தர வசதி, பணக்காரன் என்பதெல்லாம் அவனுக்கு வித்தியாசம் இல்லை. அவர்கள் ஆத்துமாவே உலகில் உள்ள எதைக்காட்டிலும் விலையேறப்பெற்றது என்பதை, மானிடர் அறியாவிட்டாலும், அந்த துஷ்ட சாத்தான் அறிவான்! நம்மைத் தேடி வந்த ‘ஆத்தும இரட்சகரை’ கண்டு கொள்வோமாக! இல்லையேல், ‘ஆத்தும விரோதி’ நம்மையும் நம் ஆத்துமாவையும் கொன்று அழிப்பான் என்பது உறுதி!

- வாலிபம் இயேசுவுக்கே

'ஜெயித்து வாழ்ந்திட' வாலிபர் செய்திகள்!

கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!

அக்டோபர்

  • தெய்வ ஞானத்தின் அதிசயம் கண்டு, சிருஷ்டிகரிடம் திரும்புங்கள்!