பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

ஜெயித்து வாழ்ந்திட வாலிபர் செய்திகள்

கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!


02.04.2025

வாலிபனே, நீ தேவனிடம் செல்ல சோம்பல் நீங்கிய சுறுசுறுப்பு வேண்டும்!

 ரு மனிதனை நம் ஆண்டவர் முழுவதுமாய் ஆட்கொண்டு நிறைப்பதற்கு, ஒருவன் தன்னை விட்டுக்கொடுத்தால் ஒழிய, அவனை அவர் ஆட்கொள்ள முடியாது! உங்களில் அவர் ஆண்டுகொள்ளும்படி ஜெயம் பெற்றுவிட்டாரா? அப்படியானால், கிறிஸ்துவாகிய அந்த விலையேறப்பெற்ற பொக்கிஷத்தை எக்காலத்தும் இழந்திடாதிருக்க ஜாக்கிரதை கொண்டிருங்கள்!

 நித்தியத்தின் சொல்லிமுடியா பொக்கிஷங்களை ஒருவன் இந்த மண்ணில் நிலையாய் பெற்றிருக்க வேண்டுமென்றால், இப்பூமிக்குரிய வாழ்வில் மனதை வைத்திடாமல், எளிய ஜீவியத்தைக் கற்றுக்கொள்வது அவனுக்கு மிகவும் அவசியம். இன்றைய நாகரீக கலாச்சார உலகத்தில் ஒருவன் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு, அதே வேளையில், பக்தியின் தியான வாழ்விலும் ஈடுபடலாம் என எண்ணுவது சுத்த அபத்தம்!

 இன்றைய விஞ்ஞானம், அது வழங்கும் சொகுசான வசதிகள், ஆகிய யாவும் ஒருவனுக்குள் செய்திடும் அபாயகரமான தீமை என்னவென்றால் “தானாக சிந்திக்கும் அவனது தெளிந்த புத்தியை அபகரிப்பதுதான்!” நாகரீகம் வழங்கிய சொகுசுகள் “முயற்சித்து ஒன்றை பெற்றிடும் வாழ்விற்கு” பெறுத்த இடறலும், அபாயத்தையும் தருவதாகவே உள்ளது. எல்லாம், “ரெடிமேட்” ஆகவும் “முன்கூட்டியே ஜீரணமான செரித்ததாகவும்” இருக்கிற இந்த வாழ்க்கை, ஒருவன் ‘சொந்தமாய்’ ஒன்றை பெறுவதற்கு தடை செய்யும் விபரீதமாய் இருக்கிறது! இந்த நாகரீக வலையில் சிக்கியவனிடம் “மூளைச் சலவை” நாளுக்கு நாள் ஏற்பட்டு, ‘உணர்வடையும்’ ஆற்றலை அவனைவிட்டு அகற்றிவிடுகிறது! இதுபோன்ற நிலைகொண்டவன் வெகு சீக்கிரத்தில் ‘சோம்பல்’ கொண்டவனாய் மாறுவான் என்பது உறுதி!

 இம்மண்ணுக்குரிய ஜீவியத்தில் ‘சோம்பலை’ கொண்டு வந்துவிட்டால் பிசாசுக்கு அதுபோதும், ஆவிக்குரிய சோம்பலை அவன் உள்ளத்தில் கூடைகூடையாய் கொட்டி விடுவான்! உறுதிபூண்ட தீர்மானங்கள்.... தீர்க்கமான முடிவுகள்.... ஆகிய எதுவும் அவனுக்கு எட்டாத ஒன்றாய் மாறிவிடும்! வாலிபனே, உறுதியான தீர்மானத்தோடு தேவனிடம் நெருங்கி வர, உன் சோம்பலை உதறிவிட்டு, தீவிரமாய் அவரை அண்டிக்கொள்!!

- வாலிபம் இயேசுவுக்கே

'ஜெயித்து வாழ்ந்திட' வாலிபர் செய்திகள்!

கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!

அக்டோபர்

  • தெய்வ ஞானத்தின் அதிசயம் கண்டு, சிருஷ்டிகரிடம் திரும்புங்கள்!