பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

பக்தியான குடும்பம்

கணவனை தலையாகக் கொண்ட குடும்பம் இல்லாமல்,
கிறிஸ்துவை தலையாகக் கொண்ட சபை இல்லை!
குடும்பம் கட்டப்படும் தேவையே முதல் தேவை.... என்பதை
இன்றைய கிறிஸ்தவம் அறியவில்லை! எனவேதான் குடும்பத்தில்
கோபம், பகை, பிரிவினை நிகழ்கின்றன!
குடும்பம் கட்டப்படாமல், குடும்பத்த


26.10.2024

6. பக்தியான குடும்பத்தில் ‘கிறிஸ்து தலையாய்’ இருந்திட வேண்டும்!

  திருமண வாழ்க்கை, ஓர் சவால் நிறைந்த ஜீவியம்! தனி மனிதனாகவோ, மனுஷியாகவோ இருக்கும்பொழுது கர்த்தரோடு பக்தியாய் வாழ்ந்து, பக்தி வைராக்கியத்தோடு பல சாதனைகள் செய்திருக்கலாம்! ஒரு வாலிபனாய் அல்லது வாலிப பெண்ணாய் இருக்கும்போதே, தெய்வ அன்பினால் நிறைந்து, கிறிஸ்துவுக்காக தங்களை அர்ப்பணித்து ஜொலிப்பது அவசியம்தான்!  ஆனால் திருமணமான பிறகு, ஒருவரையொருவர் ‘கணவன்- மனைவியாக’ அன்புகூருகிற இடம் வரும்போதுதான், உங்களின் அன்பு, உண்மையாகவே “தெய்வ அன்புதானா?” என்பதை சோதித்தறிந்திட முடியும்!

 மெய்யாகவே, நாம் ஒருவரையொருவர் அன்புகூருகிற நடைமுறை அனுபவத்தை வைத்துதான், நமக்குள்ளிருக்கும் “தெய்வ அன்பை” கணக்கிட முடியும்! ஏனென்றால், தாய், தகப்பன், சகோதரன், சகோதரி என்று சேர்ந்து வாழும்போது “தனிப்பட்ட விதத்தில்” போராட்டம், வருவதில்லை! உண்மையான போராட்டம் “ஒருவர், வாழ்க்கை துணையாய்” உங்கள் திருமண ஜீவியத்தில் பிரவேசித்த பிறகுதான் ஆரம்பமாகிறது!

 ஒரு பக்தியான குடும்பத்தின் ஒழுங்கை ஆண்டவர் கூறும்பொழுது “மனைவிக்கு கணவன் தலையாய் இருக்கிறான்! கணவனுக்கு கிறிஸ்து தலையாய் இருக்கிறார்!” என்றார் (எபே.5:23). ஆகவே, ஒரு குடும்பத்தில் கிறிஸ்துதான் தலையாய் இருக்க வேண்டும். அவருக்கு கீழ் அந்த கணவன் தன் தலைமை பொறுப்பை நன்றாய் செய்ய வேண்டும்! ‘கணவன் சரியில்லை’ என்றால், அங்கே கிறிஸ்து தலையாய் இருப்பார் என நாம் எதிர்பார்த்திட முடியாது!

 மாற்கு 3-ம் அதிகாரத்தில் “ஒரு வீட்டில் ஒரு பலவான் இருந்தால் அந்த வீடு பத்திரமாய் இருக்கும்” என்று சொல்லப்பட்டதைப் பாருங்கள்! யார் அந்த வீட்டில் பலவான்? கணவன் தான்! மனைவி தான் எதிர்பார்த்ததைப்போல் இல்லை என்றாலோ அல்லது அவளிடத்தில் குறைவுகள் காணப்பட்டாலோ, அச்சமயங்களில் கணவன் ‘ஒரு சராசரி மனிதனாய்’ வாழ்ந்துவிடாமல் தியாகத்தோடும், தெய்வீக அன்பினால் நிறைந்து, எப்பொழுதும் ஆவிக்குரிய தலைமை கொண்ட “பலவானாய்” இருப்பதற்கு, தேவ கிருபையைப் பற்றிக்கொண்டு வாழ வேண்டும்!

- ரத்னம்

பக்தியான குடும்பம்!

கணவனை தலையாகக் கொண்ட குடும்பம் இல்லாமல்,
கிறிஸ்துவை தலையாகக் கொண்ட சபை இல்லை!
குடும்பம் கட்டப்படும் தேவையே முதல் தேவை.... என்பதை
இன்றைய கிறிஸ்தவம் அறியவில்லை! எனவேதான் குடும்பத்தில்
கோபம், பகை, பிரிவினை நிகழ்கின்றன!
குடும்பம் கட்டப்படாமல், குடும்பத்த