பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

பக்தியான குடும்பம்

கணவனை தலையாகக் கொண்ட குடும்பம் இல்லாமல்,
கிறிஸ்துவை தலையாகக் கொண்ட சபை இல்லை!
குடும்பம் கட்டப்படும் தேவையே முதல் தேவை.... என்பதை
இன்றைய கிறிஸ்தவம் அறியவில்லை! எனவேதான் குடும்பத்தில்
கோபம், பகை, பிரிவினை நிகழ்கின்றன!
குடும்பம் கட்டப்படாமல், குடும்பத்த


28.09.2024

2. தேவனுக்கு முன்பாக வாழ்ந்து, பிறரை ஆசீர்வதிப்பதே, பக்தியான ஜீவியம்!

 ம் அனைவருக்குமே, நம் குடும்ப வாழ்வு எப்போதும் மகிழ்ச்சியும்! எப்போதும் அன்பும்! நிறைந்ததாய் “பரலோகம்” போல் இருக்க வேண்டும் என்ற வாஞ்சை இருக்கிறது. பரலோக குடும்பமாய் நாம் திகழ நாம் என்ன செய்ய வேண்டும்? அந்த இரகசியத்தை, பரலோகத்திலிருந்து நம்மிடை வாசம் செய்த இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையை உற்று நோக்கும்பொழுது மாத்திரமே அறிந்துகொள்ள முடியும். ஏனெனில், அவர் ஒருவரே ‘பரலோகத்தில்’ தன் பிதாவின் மடியில் இருந்தவர் என வேதம் கூறுகிறது!

 இயேசு கிறிஸ்துவோ, இந்த உலகத்தில் இருக்கும்போதுகூட தன் பிதாவை பற்றிக்கொண்டு வாழ்ந்த படியால், அந்த பரலோக பிரதிபலிப்பே “மற்றவர்கள் மீது அக்கறை கொண்டு வாழ” ‘இயேசுவுக்கு’ வகை செய்தது! அவர் காட்டிக்கொடுக்கப்பட அந்த கடைசி இராத்திரியிலுமே கூட, பிதாவின் சித்தம் மாத்திரமே செய்து அவருக்கு முடிவு வரை அர்ப்பணித்தார்! அந்த, சுகந்த வாசனையான தன் வாழ்க்கையைத்தான் சீஷர்களுக்கும் பங்கிட்டு கொடுத்தார். 

 ஆகவேதான், தனிப்பட்ட மனிதனின் கிறிஸ்தவ ஜீவியமோ, அல்லது குடும்ப ஜீவியமோ, “தனக்காக வாழுகிற வாழ்க்கையே அல்ல” என்பதை தீர்மானமாய் அறிவோமாக! சுகந்தமான கிறிஸ்துவின் ஜீவியத்தை பெற்றவர்கள் மாத்திரமே, அந்த ஜீவியத்தை “ஸ்தோத்திரத்துடன்” இயேசுவைப்போல் மற்றவர்களுக்கும் பகிர்ந்தளித்திட முடியும்! எனவே, எல்லா சூழ்நிலையிலும் தன்னை தேவனுக்கு முன்பாக சமர்ப்பித்து, அவர் சித்தம் செய்து வாழ்வதும், அதன் மூலமாய் தேவனிடத்தில் பெற்ற ஆசீர்வாதங்களை நம் குடும்பத்தினர்க்கும், சபைக்கும், நம்மைச் சுற்றி இருப்போருக்கும் கொடுப்பதே பக்தியுள்ள ஜீவியத்தின் மேன்மையாகும்!

- ரத்னம்

பக்தியான குடும்பம்!

கணவனை தலையாகக் கொண்ட குடும்பம் இல்லாமல்,
கிறிஸ்துவை தலையாகக் கொண்ட சபை இல்லை!
குடும்பம் கட்டப்படும் தேவையே முதல் தேவை.... என்பதை
இன்றைய கிறிஸ்தவம் அறியவில்லை! எனவேதான் குடும்பத்தில்
கோபம், பகை, பிரிவினை நிகழ்கின்றன!
குடும்பம் கட்டப்படாமல், குடும்பத்த