பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

பக்தியான குடும்பம்

கணவனை தலையாகக் கொண்ட குடும்பம் இல்லாமல்,
கிறிஸ்துவை தலையாகக் கொண்ட சபை இல்லை!
குடும்பம் கட்டப்படும் தேவையே முதல் தேவை.... என்பதை
இன்றைய கிறிஸ்தவம் அறியவில்லை! எனவேதான் குடும்பத்தில்
கோபம், பகை, பிரிவினை நிகழ்கின்றன!
குடும்பம் கட்டப்படாமல், குடும்பத்த


12.10.2024

4. தானாக “முந்தி” செய்திடும் விருப்பம் குடும்பத்திற்கு கேடு!

  நாம் ஒரு குடும்பமாகவோ அல்லது சபையாகவோ “கூடி வரும் வேளையில் தான்” நம்முடைய சொந்த விருப்பத்தை ‘முந்தி’ நிறைவேற்ற வேண்டும் என்கிற சுய- எண்ணம் நமக்குள் கொழுந்துவிட்டு எரியும் அபாயம் இருக்கிறது! இதுபோன்ற ‘சுயத்தின் பாதிப்பை’ “நீங்கள் ஓரிடத்தில் (குடும்பத்தில் அல்லது சபையில்) கூடிவரும்போது” அவனவன் “தன் தன் சொந்த போஜனத்தை முந்தி சாப்பிடுகிறான்” என பவுல் 1கொரிந்தியர் 11:20-ம் வசனத்தில் குறிப்பிட்டார். இவ்வித சோதனைகளை “அந்த நேரத்தில்தானே” உடனடியாக நம்மை நாம் தாழ்த்தி பிறரைச் சேவிக்க அப்பியாசித்திட வேண்டும். இயேசு கூறும்பொழுது “நான் ஊழியம் கொள்ளும்படி வராமல், ஊழியம் செய்யும்படியே வந்தேன்” என்றார். “ஊழியம் செய்யவே வந்தேன்” என்கிற அந்த அற்புதமான அடிமையின் ஸ்தானத்தை நம் இருதயத்தில் அலங்கரித்து வைத்துக்கொள்ள வேண்டும்! ஓர் உண்மையான அடிமைக்கு, “தனக்குத்தான் எல்லாம் முந்தி கிடைக்க வேண்டும்” என்கிற எண்ணமே இருப்பதில்லை! 

  பணிகள் அனைத்தையும் கஷ்டப்பட்டு செய்து முடித்த பிறகு “தனக்கு ஒன்றும் கிடைக்காமற் போனாலுமேகூட” அவன் மகிழ்ச்சியாய் இருப்பான்! அப்படி இல்லாதவர்கள், தங்கள் சொந்த விருப்பங்கள்தான் நிறைவேற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாய், குடும்பத்திலும், சபையிலும் பிரிவினையை கொண்டு வந்து விடுவார்கள்! இது என்ன அவலம், அவர்கள் கர்த்தரின் பந்தியில் கூட துணிகரமாய் பங்குபெற்று, தேவனுடைய சபையை நிந்திக்கிறார்கள். “தன் சரீரத்தை ஜீவபலியாக ‘நன்றி காணிக்கையாக’ ஆண்டவருக்குப் படைத்து சுய சித்தம் மறுத்து, தேவ சித்தம் செய்தவர்கள் மாத்திரமே” கர்த்தருடைய போஜனத்தில் பங்குபெற பாத்திரவான்கள்! “அபாத்திரமாய் புசிக்கிறவன், தனக்கே கேடுண்டாக புசிக்கிறான்” என்று 1கொரிந்தியர் 11:29-ம் வசனம் மூலமாய் தேவன் நம்மை எச்சரிக்கிறார் என்பதை குடும்பத்திலுள்ள தம்பதியரும், சபை மக்களும் அறிந்திருக்க வேண்டும்!

  குறைந்தபட்சம், நாம் நமக்கானதைத் தேடி, தேவ சித்தம் செய்யத் தவறி குழப்பம் ஏற்படும் நேரத்தில் உடனே மனந்திரும்பி ஆண்டவரிடம் சென்று “தேவனே, நான் உம் சித்தமே செய்து வாழ விரும்புகிறேன். ஆகிலும், தவறுகிறேன்! என் சித்தம், செய்து விடுகிறேனே!” என்று மார்பில் அடித்து தேவனிடம் ஒப்புரவாகும் வாஞ்சையாவது வைத்திருந்தால், அது நலமாயிருக்குமே!

- ரத்னம்

பக்தியான குடும்பம்!

கணவனை தலையாகக் கொண்ட குடும்பம் இல்லாமல்,
கிறிஸ்துவை தலையாகக் கொண்ட சபை இல்லை!
குடும்பம் கட்டப்படும் தேவையே முதல் தேவை.... என்பதை
இன்றைய கிறிஸ்தவம் அறியவில்லை! எனவேதான் குடும்பத்தில்
கோபம், பகை, பிரிவினை நிகழ்கின்றன!
குடும்பம் கட்டப்படாமல், குடும்பத்த