பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

பக்தியான குடும்பம்

கணவனை தலையாகக் கொண்ட குடும்பம் இல்லாமல்,
கிறிஸ்துவை தலையாகக் கொண்ட சபை இல்லை!
குடும்பம் கட்டப்படும் தேவையே முதல் தேவை.... என்பதை
இன்றைய கிறிஸ்தவம் அறியவில்லை! எனவேதான் குடும்பத்தில்
கோபம், பகை, பிரிவினை நிகழ்கின்றன!
குடும்பம் கட்டப்படாமல், குடும்பத்த


19.10.2024

5. கர்த்தரே கட்டும் வீடு “கனி தரும் திராட்சை செடிபோல்” இருக்கும்!

  128-ம் சங்கீதம், ஒரு குடும்பம் எப்படி இருக்க வேண்டும்? என்று நமக்கு அருமையாய் கற்றுத் தருகிறது. அதின்படி கர்த்தருக்குப் பயந்த ஒரு கணவன், கர்த்தர் தனக்குக் கொடுத்த தலைமை பொறுப்பை ஏற்று தன் மனைவியையும், பிள்ளைகளையும் தெய்வ பக்திக்கேதுவாய் நடத்த வேண்டும்! தன் ஆவிக்குரிய நல்ல ஜீவியத்தைப் பிள்ளைகளுக்கும் ஊட்டி வளர்க்க வேண்டும்! குடும்பத்தில் யாதொரு அவிசுவாசமோ, சண்டையோ, போட்டி, பொறாமை, பிரிவினை போன்ற அவபக்தியான காரியங்களை அந்த பக்தியான கணவன் அனுமதிக்க மாட்டார்! குடும்பத்தை கர்த்தருக்கேற்ற வழியில் நிறுத்த எப்போதும் பாடுபடுவார்! “கர்த்தரே தன் வீட்டைக் கட்ட வேண்டும்” என எல்லா காரியத்திலும் தன் ஆண்டவர் சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்துவிட்டு, “கர்த்தர் தன் வீட்டைக் கட்டும்” அவரது செயலை, ஒரு உடன் வேலையாளாய் தன்னைக் கண்டு, அந்த கணவர் மகிழ்வார். தான் கர்த்தருடைய வழியில் நடந்து பரவசம் கொண்ட ஜீவியத்தை, தன் மனைவிக்கும் போதித்து, மன நிறைவு கொள்வார்!

 மேலும், அந்த 128-ம் சங்கீதம் கூறுகிறபடி, தன் மனைவியைக் கனிதரும் திராட்ச செடியைப்போல் மாறுவதற்கு, மிகுந்த பொறுமையுடன் காத்திருந்து செயல்படுவார்! தன் பிரயாசத்தோடு சேர்ந்து அந்த மனைவி ஒத்துழைக்காத பட்சத்திலும், அந்த கணவனோ, சிறிதும் சலிப்படையாமல், தான் கர்த்தரிடத்தில் பெற்ற பொறுப்பை நிறைவேற்ற தொடர்ந்து விசுவாசத்தோடு பாடுபட தன்னை தயார் செய்து கொள்ள வேண்டும்! ஒருவேளை, கணவன் தெய்வ பயம் இல்லாதவராய் இருந்தால், பக்தியுள்ள அந்த மனைவி, தன் கற்புள்ள நடக்கை மூலமாக, அன்போடு அவரை கிறிஸ்துவுக்குள் கொண்டு வர பிரயாசப்பட்டு ஜெபித்து நிறைவேற்ற பாடுபட வேண்டும்! 

 அடுத்த வசனம் “உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள்” என கூறுவதை மனதில் எப்போதும் கொண்டிருக்க வேண்டும்! தன் பிள்ளைகளைக் கவனித்திடவோ அல்லது அவர்களோடு அளவளாவிய ஐக்கியத்திற்கு நேரமில்லை! என கூறுபவர்களைப்போல், மாறிவிடக்கூடாது! ஒலிவ மரத்தின் இலை, பட்டை, அதன் பழத்தின் விதைகள்.... என மரத்தின் முழு தன்மையும் ஒளஷதமாய் இருக்கும். ஒலிவ விதைகளை நசுக்கினால், உடனே எண்ணெய் வருவதுபோல, அவனும் அவன் மனைவியும், அவன் பிள்ளைகளும் “நொறுங்குண்ட ஜீவியம்” என்ன என்பதை கற்று வாழப் பழக வேண்டும்! அப்படி ஜீவித்துவிட்டால், அந்த குடும்பம் அனேகருக்கு நல்ல ஒளஷதமாய் இருப்பார்கள்! ஆம், அவன் பிள்ளைகளின் பிள்ளைகள் கூட அவ்வித ஆவிக்குரிய ஆசீர்வாதமாய் வளரத் துவங்குவார்கள். கர்த்தரால் ‘இவ்விதத்தில்’ ஆசீர்வதிக்கப்பட்ட உங்கள் குடும்பமே, உங்கள் சபையையும் ஆசீர்வதித்து, அங்குள்ள அனைவருமே “பக்தியுள்ள குடும்பமாய்” கட்டப்பட வழி வகுக்கும்!

- ரத்னம்

பக்தியான குடும்பம்!

கணவனை தலையாகக் கொண்ட குடும்பம் இல்லாமல்,
கிறிஸ்துவை தலையாகக் கொண்ட சபை இல்லை!
குடும்பம் கட்டப்படும் தேவையே முதல் தேவை.... என்பதை
இன்றைய கிறிஸ்தவம் அறியவில்லை! எனவேதான் குடும்பத்தில்
கோபம், பகை, பிரிவினை நிகழ்கின்றன!
குடும்பம் கட்டப்படாமல், குடும்பத்த