கணவனை தலையாகக் கொண்ட குடும்பம் இல்லாமல்,
கிறிஸ்துவை தலையாகக் கொண்ட சபை இல்லை!
குடும்பம் கட்டப்படும் தேவையே முதல் தேவை.... என்பதை
இன்றைய கிறிஸ்தவம் அறியவில்லை! எனவேதான் குடும்பத்தில்
கோபம், பகை, பிரிவினை நிகழ்கின்றன!
குடும்பம் கட்டப்படாமல், குடும்பத்த
05.10.2024
3. ‘மாற்றங்கள்’ இல்லத்தை பரலோகமாக்கும்!
ஓர் உண்மையான ஆவிக்குரியவன், கர்த்தரிடத்தில் தான் பெற்றுக்கொண்டதையே தன் வீட்டாருக்கும், தன் சபைக்கும் கொடுக்கிறான்! பரலோகத்தின் பொக்கிஷங்களான தேவ கிருபை, இரட்சிப்பு, தெய்வ அன்பு, தாழ்மை, சாந்தம், பொறுமை, இச்சையடக்கம், தயாளம், பிறருக்காகவே வாழ்கிற வாழ்க்கை ஆகிய அனைத்து திவ்ய சுபாவங்களும், நம்மை தேவனுக்கு அர்ப்பணித்து அவர் சித்தம் செய்யாமல் பெற்றுக் கொள்ளவே இயலாது! உண்மை என்னவென்றால், நாம் அனைவருமே மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாய் நிச்சயமாய் இருக்க முடியுமே! என்பதுதான். மனம் புதிதாகி, மறுரூபமடைந்த “கிறிஸ்துவின் சிந்தை” குடும்பத்திலுள்ள கணவனுக்கும், மனைவிக்கும் இருந்தால், அவர்கள் ஓர் “ஆசீர்வாதமான ஊற்றுக் கண்ணாய்” அந்த குடும்பத்தில் மாறிவிட முடியும்! பிலிப்பியர் 2:7- ம் வசனத்தின்படி, இயேசு கிறிஸ்து “பிதாவுக்கு சமமாய்” இருந்தபோதும், தம்மை வெறுமையாக்கி ஓர் “அடிமையின் ரூபமானார்” என்றே காண்கிறோம். ஆம், “கிறிஸ்துவின் சிந்தை” என்பது ஓர் அடிமையின் சிந்தையாகும். அவரைப்போலவே, குடும்பத்திலுள்ள தம்பதியர்கள் தங்களை ஒரு பொருட்டாக எண்ணுவதற்குரிய உயர்ந்த படிப்பு, பணம், பதவி மற்றும் எதுவானாலும் அவைகளை வெறுமையாக்கி, தங்களைத் தரைமட்டும் தாழ்த்திட வேண்டும். அவ்வாறு நீங்கள் தாழ்த்தும்போது மாத்திரமே, ஓர் அடிமையின் ரூபமெடுக்க கர்த்தர் நமக்கு கிருபையைத் தருவார்! இந்த ஆசீர்வதிக்கப்பட்ட கிறிஸ்துவின் சிந்தையைப் பெற்றவர்கள் யாவரும், குறிப்பாய் குடும்பத்திலுள்ள கணவனும் மனைவியும் பெற்று விட்டால், தனக்காக அவர்கள் வாழாமல், “பிறருக்கானவைகளையே நாடுகிற” மகிழ்ச்சியான குடும்பமாய் மாறிவிட முடியும்!
இந்த நல்ல நிலையில்தான் ‘தெய்வீக மாறுதல்’ நம்மில் பிரதிபலிக்கும்! நம்மை பிறர் கனம் பண்ண வேண்டும்! போற்ற வேண்டும்! மேன்மையாக எண்ண வேண்டும்! பிறர் நமக்கு நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டும்! போன்ற பெருமைக்குரிய காரியங்களெல்லாம் உங்களைவிட்டு அகன்று போய்விடும்! மேலும், கிறிஸ்துவின் சிந்தை “பிறரை நம்மை விட மேலானவர்களாக எண்ணவும், அவர்களை கனம் பண்ணும்படியான” அடுத்த உயர்வுக்கு உங்களை நடத்தும்! “யாரையும் இழிவாய் பேசுவதோ, யாருடைய கௌரவத்திற்கு களங்கம் விளைவிக்கவோ அவர்களால் இயலாது!” ஏன், நம் பிள்ளைகளைக்கூட வாடா, போடா, வாடி, போடி என்றெல்லாம் அழைக்காமல், அவர்களை மதிப்புடன் அழைத்து நடத்த விருப்பம் பெறுவீர்கள்! இவ்வித கிறிஸ்துவின் அடிமையாய் நீங்கள் எவ்வளவு நன்மைகளை உங்கள் வீட்டிற்கும், பிறருக்கும் நீங்கள் செய்தாலும் “நானோ, ஓர் அப்பிரயோஜனமான (எந்த சுய-லாபம் எதிர்பாராத) ஊழியன் மாத்திரமே! செய்ய வேண்டிய கடமையை மாத்திரமே செய்தேன்” என்ற அடிமை நிலையிலேயே மகிழ்வுடன் நிலைத்து நிற்பீர்கள்! முன்பு நீங்கள் கொண்டிருந்த “எனக்கு இவ்வளவு பளுவா? இப்படிப்பட்ட கீழ்த்தர வேலையா? என்ன, எல்லாவற்றையும் நானே செய்ய வேண்டுமா?” போன்ற சலிப்பான எண்ணம் வருவதேயில்லை! இது ஓர் அற்புதமான விடுதலையான வாழ்க்கை அல்லவா! இப்படி ஒரு கணவனோ, மனைவியோ அவர்களுக்கு பிறக்கும் பிள்ளையோ வாழ்ந்துவிட்டால், அந்த வீடு “பரலோகம்” என்றே கூறிட முடியும்!
- ரத்னம்