அன்று, “பெலிஸ்திய வீரனே, நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய, சேனைகளுடைய கர்த்தரின் நாமத்தில் உன்னிடம் வருகிறேன்! ‘இஸ்ரவேலை காத்திட தேவன் ஒருவரே உண்டு’ என, பூலோகத்தார் எல்லோரும் அறிந்து கொள்வார்கள்..... ஏனெனில் ‘யுத்தம் கர்த்தருடையது’ என்ற முழக்கத்தோடு, பெலிஸ்தியனை ஒரே ஒரு கல்வீச்சினால் அவனைக் கொன்றான்! இன்று, “கர்த்தருடைய நாமத்தை” நம்பி விசுவாசித்து வாழ்ந்த இந்த தாவீதின் ஜெயமே, நமது ஜெயமாகட்டும்! இந்த தாவீதின் சந்ததியிலிருந்து வந்த நம் இரட்சகரின் முழக்கமும், நமது முழக்கமும், “உம் நாமத்தில் கொண்ட விசுவாசமே, எமது ஜெயம்” என நாள்தோறும் அப்பியாசித்து, பழகி..... அப்பியாசித்துப் பழகி, தொடர்ந்து ஜெயமுடன் வாழ்வோமாக!
₹ 150