படு குழி பாவ சேற்றிலிருந்து தூக்கி எடுத்த தேவா! எமது பள்ளங்களை நிரப்பியது மாத்திரமல்லாமல், பாலைவன எம் வாழ்வை சோலை மயமாக்கும் உம் திவ்விய பிரசன்னத்தை எமக்களித்தீர்! உம் உறவோடு வந்த “வான் துளிகளையும்” எம்மீது பெய்வித்து, அன்றாட மாசு நீக்கி..... ‘ஒவ்வொரு துளிகளாக’ உம் திவ்விய சுபாவத்தை எம்மில் சேர்த்திட துணைபுரிந்தீர்!! அத்தனையும் அடைந்திட வகை செய்தது, நீர் நடந்து வைத்துச் சென்ற பொன்னான “சிலுவைப் பாதை” அன்றோ! எதையும் இழந்திடுவோம்..... ஆனால், உம்மையும், நீர் பொழியும் “மாசு நீக்கும் வான் துளிகளையும்” எமக்களித்த, அந்த ஒப்பற்ற “சிலுவை வழியை” இழந்திட மாட்டோம்!! இத்தனை பெரிய பாக்கிய வாழ்வை, இப்புத்தகம் வாசித்திடும் ஒவ்வொரு மாந்தருக்கும் அருள்புரிவீராக!
₹ 35