ஜெய ஜீவிய இரகசியம்! ஜீவியத்தின் ‘ஒவ்வொரு நாளும்’ வெற்றி வாழ்க்கையே ஆதி கிறிஸ்தவர்களின் விசேஷித்த அனுபவம்! அந்த இரகசியம் அவர்கள் ‘கர்த்தரோடு கொண்ட உறவு’ என்பதை 1கொரிந்தியர் 15:57 வெளிப்படுத்துகிறது! தோல்வியில் தொய்ந்துபோன உங்கள் ஜீவியத்தை உற்றுப்பாருங்கள்.... அங்கே, தேவன் இல்லை என்பது ஒன்றே விடை! உபதேசம் ஏராளம் உண்டு, வேத அறிவு உண்டு, தேவன் இல்லையே! ஏனோக்கு ‘தேவனுக்குப் பிரியமானவனாய்’ வாழ்ந்த இரகசியம் “அவன் தேவனோடு சஞ்சரித்தான்” என்பதை நிரூபணமாய் அறிவோமாக! (ஆதி.5:24, எபி.11:5). எது எதையோ நாடி “தேவ பிரசன்னத்தின் உறவு நாடாத” கிறிஸ்தவர்கள் இன்று ஏராளம்! யாரோ சில மனுஷர்களைப் பிரியப்படுத்தி வாழ்பவர்கள், தேவனை பிரியப்படுத்தி வாழ்வதும் கூடாத காரியம்! தேவனைத் தேடி, அவரது சமூகத்தை நாடி வாழும் பக்தர்கள் யாவருக்கும் ‘வெற்றி வாழ்க்கை’ நிச்சயமாய் உண்டு! இந்தப் புத்தகம், உங்களை தேவனை கிட்டிச் சேர்ந்திட நடத்தும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை!
₹ 150