தெய்வ அன்பின் வெள்ளமே வருக! திறந்து வைக்கப்பட்ட ஒரு அறையில், சூரிய ஒளி எவ்வாறு பாய்ந்து நிரப்புகிறதோ, அதேபோலவே நம்முடைய இருதயத்தை தம்முடைய அன்பினால் நிறைத்து விடுவதற்கு தேவன் மகா விருப்பம் கொண்டுள்ளார். நாம் சுவாசிக்கும் காற்று நம்மைச் சுற்றிலும் சூழ்ந்து நெருக்கி இருப்பதைப் போலவே, தன்னை சுவாசிக்க விரும்புவோருக்கு ‘தேவ அன்பு’ அவர்களைச் சூழ்ந்து நெருக்கி நிற்கிறது! அந்த அன்பு உள்ளே பிரவேசிக்க முடியாமல் தடை செய்யாதிருங்கள்! நீங்கள் தடைகளை அகற்றி, முழு இருதய கதவையும் திறந்துவிட்டால், தேவ அன்பின் வெள்ளம் உங்கள் உள்ளம் புளகாங்கிதம் அடையும்படி நிறைத்து விடுவதைக் காண்பீர்கள்!
₹ 55